சிகப்பு கலர் ஆகவே ஆகாத ராசிக்காரர்கள்.
- ALP அஸ்ட்ராலஜர் டாக்டர் ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார்.
ஜோதிடம் டிவி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்.
ALP அஸ்ட்ராலஜர் ALP ஜோதிட ஆசிரியர் டாக்டர் சாந்திதேவி ராஜேஷ்குமார்.
நம்ம சில நிறங்களை யாரெல்லாம் பயன்படுத்தக்கூடாது. யார் பயன்படுத்தினா நல்லா இருக்கும். அப்படிங்கறது எல்லாம் நிறைய பதிவுகளை பார்த்திருக்கோம்.
ஏன்னா ஒவ்வொரு நிறத்திற்கும் நமக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. அப்போ ஒரு சிலருக்கு ஒரு சில நிறங்கள் ஆகவே ஆகாது. அப்படி என்ன? அதுலயும் முக்கியமா சிகப்பு நிறம் யாருக்கு ஆகாது? சிவப்பு நிறத்தை பயன்படுத்தினால் என்ன நடக்கும்? அதை ஏன் பயன்படுத்தக் கூடாது? அப்படிங்கிற தகவல் தான் நாம இந்த பதிவுல தெரிஞ்சுக்க போறோம்.
பொதுவா ஜோதிட ரீதியாக நிறைய காரணங்கள் எடுத்துக்கலாம். ஒரு மனிதனுக்கு பிறந்ததிலிருந்து வாழ்நாள் வரைக்கும் சிகப்பு ஆகாதுன்னு இருக்குதாங்க? அப்படிலாம் கிடையாது. ஒரு நிறம் நான் பொறந்ததுல இருந்தே ஆகாது பா. ஒரு சிலருக்கு சொல்லுவாங்க. சில தெய்வங்களுக்கு சில நிறங்கள் ஆகாதுன்னு.
ஆனால் இந்த ஜாதகத்துல நாம அட்சய லக்ன பத்ததி என்கிற ஜோதிட முறைல தான் நாம பலன்களை பார்த்துட்டு இருக்கோம். ஒரு லக்னம் மூவாகும் போது எனக்கு சிகப்பு கலர், இந்த லக்னத்திற்கு ரொம்ப பிடிக்கும். அடுத்த லக்னம் மாறும்போது அதுவே எனக்கு ஆபத்து தரக்கூடியதாக மாறிடுது. அதுக்கு அடுத்த லக்னம் போகும் போது பரவால்ல அப்படிங்கற சூழ்நிலை தரும். அடுத்து அதுக்கு அடுத்த லக்னம் போகும் போது சூப்பரா இருக்கும். இப்படி ஒரே நிறம் தான் ஆனால் லக்னம் மாற மாற அதோட தன்மைகளும் இயல்புகளும் மாறிக்கொண்டே இருக்கும்.
அப்படிப்பட்ட சூழல் யாருக்கு இருக்கு எந்த ராசியில் இருக்கு அல்லது எந்த லக்னத்திற்கு இருக்கு அப்படின்னு பார்த்தோம்னா, உங்களுடைய அட்சய லக்னம் என்பது, அட்சய லக்னம்னா என்னங்க? வயதுடைய லக்னம். உங்களுக்கு இப்ப என்ன வயசு அந்த வயதிற்குரிய லக்னம். நீங்க பொறந்த லக்னத்தில் இருந்து பத்து பத்து வருடம் கழித்து எடுப்பது அட்சய லக்னம்.
அப்போ இந்த அட்சய லக்னத்திற்கான ஒரு நிகழ்வு, இரண்டு லக்னங்களுக்கு மட்டும் இந்த சிகப்பு நிறம் என்பது ஆகவே ஆகாது.
அது என்ன அந்த இரண்டு லக்னங்கள்?
கன்னி :
எனக்கு சுத்தமாவே சிகப்பு நிறம் எனக்கு உதவாது ஒத்துப் போகாது சுத்தமாகவே சிவப்பு நிறம் இந்த லக்னத்திற்கு ஆகாது. என்ன தெரியுமா? கன்னி.
இந்த கன்னி லக்னத்திற்கு ஏன் சிகப்பு ஆகாது? அட்சய லக்ன பத்ததி ஜோதிடம் படிச்சுருந்தீங்கன்னா உங்களுக்கு இப்ப அழகா சொல்லிடுவீங்க. ஆமாங்க சிகப்பு ஆகாதுன்னு. ஆனா இப்ப தெரியல. நான் எப்படி தெரிஞ்சுகிறது?
உங்களுடைய அட்சய லக்னம் என்னன்னு பாருங்க. கூகுள் பிளே ஸ்டோர்ல ALP அஸ்ட்ராலஜி ஆப்னு டைப் பண்ணீங்கன்னா உங்களுக்கு அந்த சாப்ட்வேர் வந்துரும். ஃப்ரீ சாப்ட்வேர் தான். நீங்க இன்ஸ்டால் பண்ணிக்கலாம். உங்களுடைய பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த ஊரை உள்ளீடு செய்யும் போது அதுல வந்து ALP என்று 12 கட்டத்தில் ஒரு கட்டத்தில் இருக்கும்.
அந்த ALP என்பது கன்னி லக்னமாக இருக்கு. கன்னில ALP கிற எழுத்து போட்டு இருக்காங்கண்ணா, அதுதான் இன்றைக்கு உங்களுடைய அட்சய லக்னம்.
இந்த அட்சய லக்னம் என்பது 10 வருடங்கள். 10 வருடத்திற்கு ஒரு முறை இந்த லக்னம் மாறும். அப்படி மாறும்போது இதுல குறிப்பா ஒரு லக்னம்னு எடுத்துக்கிட்டோம்னா அதுல மூன்று நட்சத்திரங்கள் அப்படிங்கறது இருக்கும். அந்த மூன்று நட்சத்திரங்கள் இந்த பத்து வருஷமே அவங்க சிகப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லதானா அது நல்லது. அது என்கிற காரணத்தை பார்ப்போம்.
குறிப்பா இரண்டு வருடம் இரண்டு மாதம் இருபது நாளுக்கு மட்டும் அந்த நிறத்தை சுத்தமாக பயன்படுத்தக் கூடாது. அதையும் ஏங்கறத பார்ப்போம்.
இப்போ சிவப்பு நிறம் யாருக்குரியது என்றால், சிகப்பு நிறம் செவ்வாய் பகவானுக்கு உரியது. செவ்வாய் பகவானின் நிறம் என்னன்னா சிகப்பு. கன்னி லக்னம் வரும்போது கன்னி லக்னத்திற்கு செவ்வாய் யார் அப்படின்னா எட்டாம் இடத்திற்கு சொந்தக்காரராக இருப்பார். எட்டு நாளே நமக்கு பிரச்சனை தாங்க. இந்த எட்டாமிடத்தினுடைய நிகழ்வு என்ன அப்படின்னா எதிர்பாராத திடீர் விபத்துகளையும், திடீர் கண்டங்களையும் திடீர் நிகழ்வுகளையும் தரக்கூடியது.
விழிப்புணர்வோடு இருக்கணும் :
திடீர் திடீர்னு எனக்கு தெண்ட செலவா வருது. திடீர் திடீர்னு எனக்கு கஷ்டங்கள் வருது. திடீர் திடீர்னு நான் கஷ்டப்படுறேன். திடீர்னு விபத்தாச்சு. திடீர்னு கால் வலி வந்துச்சு. திடீர்னு அறுவை சிகிச்சை வந்தது. இப்படி திடீரென்கிற வார்த்தை எந்த பாவத்துக்கு சொந்தம் என்றால் எட்டாம் பாவகத்துக்கு சொந்தம்.
அப்போ இந்த திடீர் நிகழ்வுகள் ஏற்படக்கூடிய காலகட்டங்களை இந்த செவ்வாய் தருவதுனால, இந்த செவ்வாயின் நிறமான சிகப்பு நிறத்தை தவிர்ப்பது நல்லது. இந்த கன்னி லக்னம்னு பாத்துட்டீங்க. இப்போ சிவப்பு நிறத்தை தவிர்க்கணும்.
அதுல சித்திரைன்னு ரெண்டு நட்சத்திர புள்ளிகள் உண்டு. சித்திரை நட்சத்திரம் ஒன்றாம் பாதம். சித்திரை நட்சத்திரம் இரண்டாம் பாதம். இந்த ரெண்டு நட்சத்திரங்களும் இரண்டு வருடம் இரண்டு மாதம் 20 நாட்கள் பேசும். அப்போ இந்த இரண்டு வருடம் இரண்டு மாதம் 20 நாட்கள் மட்டுமாவது நீங்கள் இந்த சிகப்பு நிறத்தை தள்ளி வைப்பது நல்லது. இல்லேன்னா மரணத்திற்கு ஒப்பான கண்டங்கள் ஏற்படும் அப்படிங்கிறது நிகழ்வு.
அதனால ரொம்ப கவனமா, ஏன்னா ஒரு சில எச்சரிக்கை பதிவுகளையும் நம்ம கொடுக்கணும். மக்கள் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருக்கணும் அப்படிங்கிறதுக்காக தான் இது. நீங்க இதுக்கு போய் ஜாதகத்தை எடுத்துட்டு வந்து எங்ககிட்ட பாக்கணும்கிற அவசியம் இல்ல. எங்களுக்கு தட்சணை கொடுக்கணும்னு அவசியமில்லை. நீங்க அழகா ஆப்ல போய் உங்களுடைய லக்னம் என்னன்னு பாத்துட்டு, சித்திரை நட்சத்திரம் 1,2 பாகம்னு போட்டு இருந்ததுனா, ALP சித்திரை 1,2 போட்டு இருந்தா மட்டும் இந்த சிகப்பு நிறத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக் கொள்ளுங்கள்.
கும்ப லக்னம் :
அடுத்து இன்னொரு லக்னம் உண்டு. அது என்ன லக்னம் தெரியுமா? அந்த இன்னொரு லக்னம் கும்ப லக்னம். இந்த கும்ப லக்னத்திற்கு சிவப்பை தவிர்த்துக் கொள்வது நல்லது. ஏங்க கும்ப லக்னத்திற்கு என்ன பிரச்சனை? கும்ப லக்னம் மூணுக்கு அதிபதி தான. பத்துக்கும் அதிபதி தான. இங்க ஏன் சிவப்பு நிறத்தை பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்க? அப்படின்னு ஒரு கேள்வி ஜோதிடம் தெரிந்தவர்களுக்கு எழலாம். ஜோதிடம் தெரியாதவங்களுக்கு நாம சொல்றத நீங்க ஃபாலோ பண்ணிக்கோங்க.
ஏன்னா கும்ப லக்னத்திற்கு பத்தாம் இடம் என்று சொல்லக்கூடிய கர்ம ஸ்தானத்திற்கும், மூன்றாம் வீடு என்று சொல்லக்கூடிய முயற்சி ஸ்தானத்திற்கும் அவர் அதிபதியாக வரக்கூடியவர்.
அப்போ இந்த பத்துங்கற அந்த கர்ம பலனை அங்க கடுமையானதாக மாற்றி விடும். அதனால சிவப்பு நிறத்தை நீங்கள் தவிர்ப்பது நல்லது. பொதுவாகவே ஒரு கிரகப்பகைகள் அப்படின்னு எடுத்துக்குவோம். அதுல புதனும் சனியும் தான் செவ்வாய்க்கு பகையாக வரக்கூடியவர்கள்.
அதுல மிதுன புதன் அப்படிங்கறது பகை கிடையாது. நாம முன்பே நிலம், நீர், காற்று , நெருப்பு ராசிகள்ல பார்த்திருப்போம். நெருப்புக்கு காற்று உதவும் அப்படின்னு சொல்லி. ஆனா இங்க கன்னியினுடைய புதனுக்கும் மேஷ செவ்வாய்க்கும் இங்கு பகையாக மாறும்.
கர்மபலம் :
அதேபோல இங்க கும்பத்திற்கும் மேஷத்திற்கும் பகையாக மாறும். கும்பத்திற்கும் விருச்சிகத்துக்கும் பகையாக மாறும். காற்றுக்கு நீர் ஆகாதுன்னு சொன்னோமா இங்க கும்பம்ங்கிறது காற்றா? நீங்க விருச்சிகம் என்பது நீரா? அப்ப மாறும். அப்போ பத்துங்கிற அந்த கர்மபலம் அதிகமாக இயக்குவதனால, அப்போ இங்க விருச்சிகத்திற்கும் கும்பத்திற்கும் அகைன்ஸ்டான பலன்களைத் தரும். அதனால இங்கு பிரச்சனைக்குரிய நிகழ்வு உண்டு. அப்போ இந்த காலகட்டங்களில் செவ்வாயினுடைய நிறத்தை சிகப்பு நிறத்தை நீங்கள் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது.
எப்ப பயன்படுத்தலாம்?
சரி பயன்படுத்தலாம். எப்ப பயன்படுத்தலாம்? என்னங்க இது பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்றீங்க. பயன்படுத்தலாம்னு சொல்றீங்க. நான் அணியக்கூடாது. என்னுடன் வச்சிக்க கூடாது. ஆனால் நான் யாருக்காவது வாங்கி தானமாக கொடுக்கலாம்.
சிகப்பு நிறத்தை, இப்ப என்கிட்ட இருக்கு. சிகப்பு சட்டை ஆசை ஆசையாக வாங்கினேன். உங்களுக்கு சித்திரை நட்சத்திரம்னு கண்ணுல பட்டுருச்சு. இப்ப என்ன பண்ணலாம்? அத வச்சு என்ன பிரயோஜனம்? அதையே நீங்க தானமாக கொடுக்குறீங்க அப்படின்னா, அதுவே உங்களுக்கு பரிகாரமாக மாறும்.
சிவப்பு நிறம்னதும் நம்ம ஆளுங்க குதர்க்கமாகவும் சில கேள்விகள் எல்லாம் கேட்பாங்க. எப்படின்னா? சிகப்பு நிறமே ஆகாதுன்னு சொல்றீங்க. என்னுடைய உடம்புல ஓடக்கூடிய ரத்தம் சிவப்பு தானே? அப்படின்னு கேப்பீங்கல, தோணும். நிறைய அறிவுபூர்வமாக சிந்திக்கிறவங்களுக்கு எல்லாம் இந்த கேள்விகள் கேட்கணும்னு தோணும்.
அப்ப இவங்க என்ன பண்ணலாம்? அந்த ரத்தத்தை முழுமையா நம்மளால தானம் கொடுக்க முடியாது. அந்த ரத்தத்தை நம்ம இல்லாம பண்ணவும் முடியாது. அந்த ரத்தம்ங்கறது நம் உடம்புக்கு அவசியமானது.
அப்போ நாம என்ன பண்ணனும்?
ஏன்னா லக்னம் மாற மாற அது மாறிக்கிட்டே இருக்கும்ல. கலர்னா நாம பயன்படுத்த போறதில்ல. அது தவிர்க்க முடியும். நம்ம உடம்புல ஓடுற ரத்தத்தை அப்படி பண்ண முடியாது. அப்ப என்ன பண்ணலாம்? அந்த ரத்தம் தானம் பண்றீங்க அப்படின்னா அது பரிகாரமாக மாறும்.
அதனால நீங்க சிவப்பு நிறம் ஆகாது சொன்னதும் பயப்படாதீங்க. அதை தவிர்ப்பது அந்த நேரத்தை அதிகமாக பயன்படுத்துவது அது தவறு.
சிவப்பு கலந்த நிறங்களை பயன்படுத்திக்கலாமா? அதாவது சிவப்பாக தெரியும். ஆனால் சிவப்பா இருக்காது. நாம பொட்டு வைக்கிற அந்த தாழம்பூ குங்குமம் அப்படிங்கறது சிகப்பு கலர் தான். ஆனால் அதை மெருன்னு ஒரு பெயர் கூட்டி வைப்போம். இது டார்க் அடர் சிவப்பு இது இளம் சிவப்பு இது லேசு சிவப்பு இது காது சிவப்பு அப்படின்னா நிறைய சிவப்புகள் இருக்கு.
அதுல பார்த்ததும் பளிச்சுன்னு இது சிவப்பு தாங்க. செவ செவ செவன்னு இருக்கு அப்படின்னு நினைக்கிறோமா அந்த சிவப்ப நீங்க தவிர்த்துக்கோங்க. சில கலர் காம்பினேஷன்ல சிவப்பு கலந்தா தான் சில கலர்கள் கிடைக்கும். அப்படி கிடைக்கும்போது இதுக்குள்ள சிவப்பு இருக்கே, ஒரு ஆடைகள்ல எடுத்துக்கலாம், அல்லது ஒரு பட்டு புடவைல எடுத்துக்கிட்டோம்னா சிவப்பு நூலை கலந்து வேற கலரை இணைக்கும் போது ஒரு கலர் மிக்ஸிங்கா கிடைக்கும்.
அப்போ அந்த சிவப்பை பயன்படுத்தலாமா?
அது வெளிப்பார்வைக்கு நேரடியாக அது தோன்றாது. அதனால அதை தவிர்த்துக்கலாம். இப்படி நாம சில முக்கியமான நிகழ்வுகளுக்காக நம்ம புறப்படும் போது, சில நிகழ்வுகளை பயன்படுத்தும் போது இந்த சிகப்பு நிறத்தை அதிகம் பயன்படுத்தாமல் இருந்திங்கனாலே உங்க வாழ்க்கையில தேவையில்லாமல் திடீர் கஷ்டங்கள் அப்படிங்கறது வராமல் உங்களால தவிர்த்துக்க இருக்க முடியுமா? தடுக்க முடியுமா? பாதுகாத்திருக்க முடியுமா? முடியும் அப்படிங்கறதுதான் இந்த நிகழ்வு.
அதனால சிகப்பு நிறத்தை கன்னி லக்னமும் கும்ப லக்னமும் அவாய்ட் பண்ணிக்கோங்க.
மேஷ லக்னம் :
மேஷ லக்னக்காரர்கள் இந்த சிகப்பு நிறத்தை கொஞ்சம் குறைவாக பயன்படுத்திக்கோங்க. ஏன்னா மேஷத்திற்கு எட்டாம் பாவகத்திற்கு அதிபதி செவ்வாய் தான். அதனால அந்த மேஷத்திற்கு கொஞ்சம் அரை பலன் அப்படிங்கறது உண்டு. அதனால் சிவப்பு நிறத்தை கொஞ்சம் குறைவாக பயன்படுத்திக்கோங்க அப்படிங்கறது எங்க பதிவு செய்றோம்.
சிவப்பு எல்லாருக்கும் இன்றியமையாத ஒரு நிறமாக இருந்தாலும் இந்த இரண்டு லக்னங்களுக்கு கொஞ்சம் சிக்கலான சூழ்நிலை அமைச்சு கொடுக்கும். இந்த கும்ப லக்னத்தில் எந்த நட்சத்திரம் அதை சொல்லல. அதையும் தெரிஞ்சிக்குவோம்.
கும்ப லக்னம் :
கும்பத்தில் அவிட்டம் 3, 4 பாதங்கள் இருக்கும். சதயம் 4 பாதங்கள் இருக்கும். பூரட்டாதி 3 பாதங்கள் இருக்கும். இதுல அவிட்டம் நட்சத்திரம்னு உங்களுக்கு காமிக்குது அவிட்டம் 3,4 பாதம்னு காமிச்சா மட்டும் நீங்க கொஞ்சம் கூடுதல் கவனத்தோட இருங்க.
அப்போ இங்க செவ்வாயுடைய நட்சத்திரம், இங்க கன்னியில வரக்கூடிய சித்திரை 1,2 அங்க கும்பத்தில் வரக்கூடிய அவிட்டம் 3,4 பாதங்கள் உங்களுக்கு எச்சரிக்கையாக பயணிக்க கூடிய ஒரு காலம். சிவப்பு நிறத்தை அணிந்து கொண்டு அப்படிங்கறது கவனமா இருங்கன்னு சொல்லிக்கிறேன். மீண்டும் இனியொரு நிகழ்வில் சந்திப்போம்.
நன்றி.
வணக்கம்.
- DR. ஸ்ரீ குரு சாந்திதேவி ராஜேஷ்குமார், ALP ASTROLOGER
www.alpastrology.com
Contact: 9786556156 / 9363035656
.jpeg)
0 comments:
Post a Comment